பிரமுகர்களின் வாழ்த்து செய்தி!

நாடு நிம்மதியான திசையை நோக்கி நகர வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க பிராத்திப்போம்.
 
நூருல் ஹுதா உமர் 

முஸ்லிம்கள் உலகெங்கிலும் உள்ள தமது இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து கொண்டாடும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்றாஹீம் நபி அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இறைவனுக்காக மேற்கொண்ட பெரும் அர்ப்பணிப்புகளை நினைவுக்கூர்ந்து உலகவாழ் முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் மகிழ்ச்சியுடனும் இப்பெருநாளை கொண்டாடுகின்றனர்.இக்காலப்பகுதியிலேயே உலகெங்கிலுமிருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களின் ஒன்றான ஹஜ் கடமைக்காக மக்காவில் ஒன்றுசேர்கின்றனர். இப்படியான ஒற்றுமை, சமத்துவம், நல்லிணக்கம், தியாகம், சமாதானத்தை போதிக்கும் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிங்களுக்கு இப்றாஹீம் நபி அவர்களும் அவரது குடும்ப உறுப்பினர்களும் இறைவனுக்காக மேற்கொண்ட பெரும் அர்ப்பணிப்புகளிலிருந்து நிறைய படிப்பினைகளை நாம் கற்கலாம்.

இன்றைய நிலையில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு பெருநாளை கொண்டாடும் இலங்கையர்கள் நாடு நிம்மதியான திசையை நோக்கி நகர வேண்டும் என்றும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க பிராத்திப்போம்.

கலாநிதி அன்வர் முஸ்தபா
தலைவர்
ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி

 
—————————————————————————————————-
நாட்டின் பொருளாதாரம் ஓங்கி நிம்மதியாக வாழ்ந்து நாட்டில் சுபீட்சம் ஓங்க எல்லோரும் இந்த புனிதமிகு நாளில் பிராத்திப்போம்.
 
நூருல் ஹுதா உமர் 

வளம் பெறும் இந் நாள் நலம் பெறும் மக்கள் கூட்டம், தியாகத்தின் திருநாள், தீமைகள் போக்கும் பெருநாள்
உன்னத நபி இப்றாகிமும் தன் மகனார் இஸ்மாயிலும் உத்தமர்கள் மனிதகுல நேசர்கள் வரலாறு நினைவு கூறும் இந்நாள் நன்நாள். ஹஜ் கடமை முடித்திட பெரும் திரளாய் திரண்டு மக்கமாம். அந்த மக்கத்து நகரும் மதினத்து வாசலும் ஒளி பெறும் திருநாள்.முஸ்லிம்கள் குளித்து புத்தாடை அணிந்து நறுமணம் பூசி சுத்தமாகி மஸ்ஜிதை தரிசித்து மானிடத்தை நிலை நிறுத்த உத்தம நபிகள் வழியில் கட்டியனைத்து முத்தமிட்டு ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரன் என்பதை நிரூபிக்கும் ஹஜ் நாளில் இலங்கைக்கு நல்ல தீர்வு கிட்டட்டும். சகோதர நாடுகள் சமாதானம் தர உதவட்டும். உலக வாழ் மக்கள் நெஞ்சில் ஒளி வீசட்டும். ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்கள்.

தேர்தல்கால குத்துவெட்டுக்கள், அரசியல் நெருக்கடிகள், இனவாத பேரிடரால் அவதியுறும் இலங்கை தேசம் பொருளாதார சீர்கேட்டில் படுபாதாள குழியில் வீழ்ந்து கிடக்கும் இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் ஓங்கி இலங்கையர்கள் நிம்மதியாக வாழ்ந்து நாட்டில் சுபீட்சம் ஓங்க எல்லோரும் இந்த புனிதமிகு நாளில் பிராத்திப்போம்.

கலீலுர் ரஹ்மான் (ஊடகவியலாளர்)
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

 
——————————————————————————————————–

ஹஜ் பெருநாளை – இந்த வருடம் கொண்டாடும் வாய்ப்பை பெற்ற உலகவாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் முதலில் எனது ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

 
நூருல் ஹுதா உமர் 

கடந்த வருடம் – கொரோனா எனும் கொடிய நோய் தாண்டவமாடிய சூழலில் – ஹஜ் பெருநாளை கொண்டாடினோம். இந்த வருடம் – பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெருநாளை சந்தித்துள்ளோம். தியாகத் திருநாள் என அழைக்கப்படும் இந்த ஹஜ் பெருநாளை – சில விட்டுக்கொடுப்புக்களோடு – அடுத்தவர்களுக்கு முடிந்தளவு உதவிக்கரம் நீட்டி கொண்டாட முயற்சிப்போம்.உணவுப் பஞ்சம் – இன்று எமது நாட்டை ஆட்கொண்டுள்ளது. எனவே எமது உழ்கிய்யாவின் பெரும் பங்கை வறுமை நிலையில் உள்ள குடும்பங்களை இனங்கண்டு வழங்குவோம். நோற்றும்(9) இன்றும் (10) – புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் உலக வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…

எ.சி.எஹியாகான்
தேசிய பிரதி பொருளாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.