கிழக்குக்கு தமிழ் பேசும் ஒருவரை ஆளுநராக நியமிக்க நடவடிக்கை எடுங்கள் : அரசுக்கு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கோரிக்கை

நூருல் ஹுதா உமர்

கிழ‌க்கு மாண‌த்தில் 80 வீத‌மானோர் த‌மிழ் பேசும் ம‌க்க‌ளே. இத‌ன் ஆளுன‌ராக‌ த‌மிழ் பேசும் ஒருவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌டுவ‌த‌ன் மூல‌மே ம‌க்க‌ள் மொழி பெய‌ர்ப்பாள‌ர் இன்றி த‌ம‌து பிர‌ச்சினைக‌ளை ஆளுன‌ரிட‌ம் எடுத்துச்செல்ல‌ முடியும். அதனால் கிழ‌க்கு மாகாண‌ ஆளுந‌ராக‌ கிழ‌க்கை சேர்ந்த‌  த‌மிழ் பேசும் ஒருவ‌ரை நிய‌மிக்கும் ப‌டி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து.

இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மேலும் தெரிவித்த‌தாவ‌து, மாகாண‌ ச‌பைக‌ள் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌த‌ன் நோக்க‌மே அம்மாகாண‌ ம‌க்க‌ளின் கால‌டிக்கு அர‌ச சேவைக‌ள் வ‌ர‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே. மொழி ரீதியாக‌ த‌மிழை கொண்ட‌ வ‌ட‌மாகாண‌த்துக்கு பெரும்பாலும் த‌மிழ் பேசுப‌வ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌தை க‌ண்டுள்ளோம். ஆனால் இன்று கிழ‌க்கில் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புள்ளாவை த‌விர‌ வேறு த‌மிழ் பேசும் ஆளுன‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌வில்லை.

ஆக‌வே புதிய‌ ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌ அவ‌ர்க‌ள் முன்னெடுத்துச்செல்லும் ந‌ல்ல‌தொரு தேசிய‌ அர‌சிய‌ல்  வ‌ழிகாட்ட‌லில் கிழ‌க்குக்கான‌ ஆளுன‌ரும் த‌மிழ் பேசும் ஒருவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌டுவ‌து மிக‌ ந‌ல்ல‌து என்ற‌ கோரிக்கையை ஜ‌னாதிப‌தி ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வின் ஆத‌ர‌வுக்க‌ட்சியான‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) ஆகிய‌ நாம் கேட்டுக்கொள்கிறோம்.ஜ‌னாதிப‌தி ரணில் விக்ர‌ம‌சிங்க‌ த‌லைமையிலான‌ புதிய‌ அர‌சாங்க‌த்தின் பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ மீண்டும் க‌ம‌ல் குண‌ர‌ட்ன‌வை நிய‌மித்திருப்ப‌து மிக‌வும் பொருத்த‌மான‌ செய‌லாகும்.

திரு. க‌ம‌ல் குண‌ரட்ன‌ அவ‌ர்க‌ள் பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ க‌ட‌ந்த‌ அர‌சில் பொறுப்பேற்ற‌து முத‌ல் நாட்டின் தேசிய‌ பாதுகாப்பு மிக‌ச்சிற‌ந்த‌ முறையில் இருந்த‌தை க‌ண்டோம். பெரும்பாலும் பொலிசாரும், இராணுவ‌த்தின‌ரும்  மிக‌வும் ஒழுக்க‌த்துட‌ன் ந‌ட‌ந்து கொண்டதையும் நாட்டின் எந்த‌வொரு மூலையிலும் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ செய‌ல்க‌ள் மீலெழாத வ‌கையில்  நாட்டை ஸ்தீர‌மாக‌ வைத்த‌தில் க‌ம‌ல் குண‌ர‌ட்ன‌வின் ப‌ங்கு அள‌ப்ப‌ரிய‌தாகும்.

இன‌வாத‌ம், ம‌த‌ வாத‌ம் இல்லாத‌ சிற‌ந்த‌ ஆளுமையையும் திற‌மையையும் கொண்ட‌ ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் க‌ம‌ல் குண‌ர‌ட்ன‌வை மீண்டும் பாதுகாப்பு செய‌லாள‌ராக‌ நிய‌மித்த‌மைக்காக‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி) ஜ‌னாதிப‌திக்கு ந‌ன்றி தெரிவிப்ப‌துட‌ன் க‌ம‌ல் குண‌ர‌ட்ன‌வுக்கும் வாழ்த்துக்க‌ளை தெரிவித்துக்கொள்கிற‌து என்றா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.