அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சரிவு

பருப்பு, சீனி , கிழங்கு, வெங்காயம், மிளகாய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக புறக்கோட்டை வர்த்தக சங்கம்
தெரிவித்துள்ளது.

அதன்படி, ரூ.600 ஆக இருந்த பருப்பு மொத்த விலை ரூ.410 ஆகவும், ரூ.330 ஆக இருந்த சீனியின் மொத்த விலை ரூ.270 ஆகவும், ரூ.215 ஆக இருந்த உருளைக்கிழங்கின் மொத்த விலை ரூ.150 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. 600 ரூபாவாக இருந்த வெங்காயத்தின் மொத்த விலை 420 ரூபாவாகவும், 1900 ரூபாவாக இருந்த மிளகாய் விலை 1300 ஆகவும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மேலும் டொலரின் ஸ்திரத்தன்மை மற்றும் வங்கிகள் டொலர்களை வழங்குவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்