ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

-சி.எல்.சிசில்-

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் உட்பட ஜனநாயகப் போராட்ட செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் பாசிசவாதமாக செயற்பட்டு வருவதாகவும் இதன்போது பதாகைகளை போராட்டத்தில் பங்கேற்றோர் தாங்கியிருந்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்