மின்கட்டண அதிகரிப்பு செவ்வாய்க்கிழமை

மின் கட்டணங்களின் விலை அதிகரிப்பு விபரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணம் காரணமாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்கப்படுமா என திறைசேரியிடம் வினவிய போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நீர் மின் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க முடிந்தால் தினசரி மின்வெட்டை நிறுத்த முடியும் என இங்கு தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, இந்த வார இறுதியில் ( 6ம், 7 ம் திகதி)மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காவியன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்