மண்ணெண்ணெய் விலை திருத்தம் அவசியம் – காஞ்சனா….

மண்ணெண்ணெய் விலை திருத்தம் பல வருடங்களாக கட்டாயமாக இருந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நஷ்டத்திற்கு மானிய விலையில் எரிபொருளை விற்பது ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“செலவுகளுக்கு இணையான விலைகளுடன், மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மீன்பிடி மற்றும் தோட்டத் துறைகளுக்கு நேரடி பண மானியத்தை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது என அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலை லீற்றருக்கு 340 ரூபாவாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் உயர்த்தப்பட்டது.

இதன்படி, மண்ணெண்ணெய் விலை லீற்றருக்கு 253 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் மண்ணெண்ணெய் லீற்றர் 87 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.