ஜூலை மாதத்தில் பணவீக்கம் 66.7% ஆக அதிகரிப்பு

-சி.எல்.சிசில்-

நாட்டில் ஜூலை மாதத்தில் பணவீக்கம் 66.7% ஆக அதிகரித்துள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (22) இது தொடர்பான தரவுகளை வெளியிட்டது. ஜூன் மாதத்தில் பணவீக்க வீதம் 58.9% ஆக இருந்தது.


போக்குவரத்துப் பிரிவில் அதிக பணவீக்க வீதம் காட்டப்பட்டுள்ளது, அந்த வகையில் பணவீக்க வீதம், ஜூன் மாதத்தில் 96.8% ஆக இருந்தது, கடந்த மாதம் 117.1% ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த மாதம் உணவு வகைகளின் பணவீக்கம் 82.5% ஆக காணப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.