சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு ஏதுவான பாழடைந்த கட்டடங்களை இடிக்க தீர்மானம்.-நகரசபை தவிசாளர்

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு ஏதுவாக காணப்படுகின்ற பாழடைந்த கட்டடங்களை இடித்தழிக்க தீர்மானித்திருப்பதாக சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட உதயசூரியன் பகுதியில் பாழடைந்த நிலையில் காணப்படுகின்ற சுகாதாரத் தொழிலாளர் விடுதியில் சட்டவிரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் நகரசபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.அதே சமயம் மீசாலைப் பகுதியில் உள்ள பயன்படுத்தாத பேருந்து தரிப்பிடம் ஒன்றிலும் இரவு வேளைகளில் சமூகவிரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதாக எமக்கு தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனால் பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டு பாவனைக்கு ஏற்ற வகையில் இல்லாத குறித்த பொதுக் கட்டடங்களை இடித்தழிக்க சபை நடவடிக்கை எடுத்துள்ளது.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.