தமிழர் நில அபகரிப்பிற்கு எதிரான மக்கள் போராட்டம் – சற்று முன்னர் கைது செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர்!

கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் முல்லைத்தீவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அழைக்கப்பட்ட நிலையிலேயே சின்னராசா லோகேஸ்வரன் முல்லைத்தீவு காவல்துறையினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 21ஆம் திகதி குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர் கைது

தமிழர் நில அபகரிப்பிற்கு எதிரான மக்கள் போராட்டம் - சற்று முன்னர் கைது செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர்! | Mullaitivu Kurunthurmalai Police Arrest Protest

இந்த ஆர்ப்பாட்டம் மக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில்சமூகப் பிரதிநிதிகள், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்துகொண்ட வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் உள்ளிட்ட பலருக்கு எதிராக தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு காவல் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட ரவிகரன் மற்றும் மயூரன்

தமிழர் நில அபகரிப்பிற்கு எதிரான மக்கள் போராட்டம் - சற்று முன்னர் கைது செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர்! | Mullaitivu Kurunthurmalai Police Arrest Protest

அவ்வாறு விசாரணைக்கு சென்றிருந்த நிலையில், அன்றைய தினம் இரவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.