ரணிலின் அதிரடி தீர்மானம்..! அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள்

அதிபர் மாளிகை, அதிபர் செயலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசங்களை விசேட அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு கையெழுத்திட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

போராட்டத்தின் எதிரொலி

ரணிலின் அதிரடி தீர்மானம்..! அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் | President House Has Been Declared Safe Zones

இலங்கையின் யுத்தம் நடைபற்ற காலத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக நாட்டின் பல இடங்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. அது பொதுவான அனுபவமாக இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் அனைத்து பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தியுள்ளார்.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக வெடித்த மக்கள் புரட்சியின் போது அதிபர் மாளிகை, அதிபர் செயலகம் மற்றும் அலரி மாளிகை உள்ளிட்ட அரச கட்டிடங்கள் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் எதிரொலியே தற்போது குறித்த பிரதேசங்கள் விசேட அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்த காரணம் என தெரிவிக்கப்படுகின்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.