கண்டி மாநகர சபை நீர் விநியோகத்திற்கான கட்டணத்தை அதிகரிக்கிறது

ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் விநியோகத்திற்கான கட்டணத்தை 25 வீதத்தால் அதிகரிக்க கண்டி மாநகர சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, தற்போதைய 30 வீதத்தில் இருந்து 55 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

நகர்ப்புற மக்களுக்கு நீர் வழங்குவதன் மூலம் சபைக்கு மாதாந்தம் ஏற்பட்டுள்ள 15 மில்லியன் ரூபா நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் விசேட பொதுக்கூட்டத்தின் ஏகமனதான ஒப்புதலுடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் பிரதி மேயர் இலாஹி அப்தீன் தெரிவித்தார். மத வழிபாட்டுத் தலங்களில் கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட மாட்டாது என பிரதி மேயர் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.