மக்களின் மீட்சிக்கு வழிவகுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடு! ஐநாவில் அலிசப்ரி உரை

இலங்கை எதிர்கொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (25) நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த செயற்பாடு இலங்கை மக்களின் மீட்சி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

புதிய அரசாங்கத்தின் செயற்பாடு

மக்களின் மீட்சிக்கு வழிவகுக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடு! ஐநாவில் அலிசப்ரி உரை | Ali Sabry To Speak To Un For Sri Lanka

இலங்கையின் புதிய அரசாங்கம் நிதி ஒழுக்கம், பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தம் விடயத்தில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

அத்துடன் கருத்து சுதந்திரத்தை அங்கீகரிக்கும் அதேவேளையில் அது அரசியலமைப்பின் வரம்புகளுக்குள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.