அநுராதபுரத்தில் யானை தாக்குதலில் ஒரு வாரத்தில் மூவர் பலி

அநுராதபுர மாவட்டத்தில் ஒரு வார காலத்துள் காட்டு யானைகளின் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.


மிஹிந்தலை மரதன்கல்ல எலபங்குளம் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 51 வயதுடைய இரு பிளை்ளைகளின் தந்தையும் மஹாவிலச்சிய எலபத்கம, துனுமண்டலாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 30 வயதுடைய இளம் விவசாயி ஒருவரும் மதவாச்சி பிஹிம்பியகொள்ளாவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 56 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான விவசாயி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்