விவசாயிகள் சந்தேகமின்றி பெரும் போகத்தை ஆரம்பிக்க முடியும்: மஹிந்த அமரவீர…

பெரும் போகத்திற்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போதியளவு உரங்களை கையிருப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த உர இருப்பு விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

பெரும் போக தேவைகளுக்கு உரம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலின் போது, ​​பெரும் போக நெல் விவசாயம் மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான சேதன மற்றும் இரசாயன உரங்களை வழங்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்படி, விவசாயிகள் எவ்வித சந்தேகமும் இன்றி பெரும் போக பயிர்ச்செய்கைகளை ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.