ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்த இடம்..!
வறுமை கோட்டின் கீழ் உள்ள 54 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் திட்டம் அடையப்படுத்தியுள்ளது.
இவ்வாறு, வறுமை கோட்டின் கீழுள்ள 54 நாடுகளுக்கும் உடனடியாக கடன் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது.
உடனடி நிவாரணம்
இந்தநிலையில் உடனடி நிவாரணம் இல்லாமல் 54 நாடுகளில் வறுமை நிலைகள் உயரும், அத்துடன் மிகவும் தேவைப்படும் முதலீடுகள் நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் வோசிங்டன் மாநாட்டுக்கு முன்னர், வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பலமுறை எச்சரித்தபோதிலும், மாற்றங்கள் நிகழவில்லை. மாறாக அபாயங்கள் அதிகரித்து வருகின்றன என்று ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் தலைவர் அச்சிம் ஸ்டெய்னர் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்
கருத்துக்களேதுமில்லை