பகிடிவதை: ருஹுணு பல்கலைக்கழக 200 மாணவர்களுக்கு ஒழுக்காற்று விசாரணை

ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், அனைத்து இரண்டாம் வருட மாணவர்களுக்கும் எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளது.

அத்துடன் அவர்கள்  தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டில் மருத்துவ பீடத்தில் நுழைந்த புதிய மாணவர்களை பகிடிவதை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்ைக மேற்கொள்ளப்படவுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட இரண்டாம் வருட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்ைக மேற்கொள்ளப்படவுள்ளதாக ருஹுணு  பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பதில் பீடாதிபதி பேராசிரியர் சன்ன யஹதுகொட தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.