உலக வர்த்தக மையத்துக்கு அழைத்து வரப்பட்ட திலினி பிரியமாலி!

கோடீஸ்வர வர்த்தகர்கள் உட்பட சமூகத்தின் செல்வந்தர் வகுப்பினரை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி இன்று (12) கொழும்பு உலக வர்த்தக மையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பில் அவர் இங்கு அழைத்து வரப்பட்டார். நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட விசேட உத்தரவின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவரை விசாரணைக்காக உலக வர்த்தக நிலையத்துக்கு அழைத்து வந்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக அவர் மேலும் மூன்று இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார். தடுப்புக்காவலில் இருக்கும் சந்தேகநபரான திலினி பிரியமாலி உலக வர்த்தக மையத்துக்கு வரும் போது கைவிலங்கு அணியாமல் இருந்தமை விஷேட அம்சமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.