ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை !
அமெரிக்க தடை காரணமாக ரஷ்யாவின் MIR கொடுப்பனவு முறைமையை அங்கீகரிக்க முடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட MIR கொடுப்பனவு முறையின் மீதான அமெரிக்காவின் தடைகள் காரணமாக, மத்திய வங்கி தற்போதைய நிலையில், MIR திட்டத்தை வங்கி முறைமைக்குள் செயற்படுத்துவதற்கான கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்கும் நிலையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல வங்கிகள் அமெரிக்கத் தடைகளைத் தவிர்ப்பதற்காக MIR அட்டை திட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை