மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயது ஓராண்டு நீடிப்பு

இலங்கையில் மருத்துவர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை ஒரு வருடத்தினால் நீடிக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (18) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், இந்த வருடத்தில் 63 வருடங்களைப் பூர்த்தி செய்த வைத்தியர்கள் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெற வேண்டும்.

ஆண்டு இறுதிக்குள் 60, 61 மற்றும் 62 வயதுடைய மருத்துவர்கள், அடுத்த ஆண்டு பிறந்த தேதியைத் தொடர்ந்து ஓய்வு பெற வேண்டும்.

எவ்வாறாயினும், இந்த வருடத்தில் 59 வயதான வைத்தியர்கள் 2023 ஆம் ஆண்டு 60 வயதைப் பூர்த்தி செய்ததன் பின்னர் ஓய்வு பெற வேண்டும் என அமைச்சர் குணவர்தன தெரிவித்தார்.

பொதுத்துறை ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60 ஆக அண்மையில் திருத்தப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.