தீபாவளிக்கு ‛வாரிசு’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ்

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உட்பட பலர் நடித்து வரும் வாரிசு படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதி கட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ள அதேவேளை புரொமோஷன் பணிகளையும் ஆரம்பித்து விட்டார்கள்.

அதன் முதல் கட்டமாக வாரிசு படத்தின் சிங்கிள் பாடலை தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

தீபாவளி 24ம் திகதி என்பதால் அதற்கு முந்தின நாள் அன்று விஜய்யின் வாரிசு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.