இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினாகள் பதவி விலக வேண்டும்..! சபையில் கோரிக்கை

இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கோரியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றில் சுமார் பத்து இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

22ம் திருத்தச் சட்டம்

இரட்டைக் குடியுரிமை உடைய நாடாளுமன்ற உறுப்பினாகள் பதவி விலக வேண்டும்..! சபையில் கோரிக்கை | Parliament Members With Dual Citizenship Resign

22ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இரட்டைக் குடியரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகாலில் இருந்து விலக வேண்டுமென கோரியுள்ளார்.

22ம் திருத்தச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பினை மதிக்க வேண்டுமாயின் இட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பதவி விலக வேண்டுமென பேராசிரியர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.