பாரிய விபத்துக்குள்ளாகிய சிறிலங்கா இராணுவ வாகனம்..! இராணுவ உயர் அதிகாரி உயிரிழப்பு

இராணுவ வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இராணுவ உயர் அதிகாரி (கெப்டன்) ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் 8806 இலக்கம் கொண்ட டிஃபென்டர் ரக வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து முத்துவெல்லவில் உள்ள மரத்தில் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

உயிரிழந்துள்ளத நபர்

பாரிய விபத்துக்குள்ளாகிய சிறிலங்கா இராணுவ வாகனம்..! இராணுவ உயர் அதிகாரி உயிரிழப்பு | Army Soldier Dies In Car Accident

இந்த விபத்தில் இராணுவ கெப்டன் உயிரிழந்துடன் மேலும் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாகனம் இன்று சனிக்கிழமை (22) அதிகாலை திருகோணமலையில் இருந்து மாதுரு ஓயா நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 4 சிறப்புப் படையைச் சேர்ந்த கேப்டன் தேவிந்த உட்வார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.