தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி பாடசாலை நூலகத்தினால் வாசக பதாதைகள் வழங்கி வைப்பு…..

தேசிய வாசிப்பு மாதம்
ஓக்டோபர் 2022 “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளின் கீழ் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையினால் 27/10/2022 வியாழக்கிழமை காலை 9. 30 மணியளவில் நூலக வாசகங்களை அன்பளிப்பாக வழங்கி வைக்கும் நிகழ்வு கமு/திகோ/பாசுபதேஸ்வரா வித்தியாலயம் மற்றும் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய பாடசாலை நூலகத்தில் பாடசாலை அதிபர்களான திரு. M. இந்திரன், திரு.மு. சன்டேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு எனும் தலைப்பில் நூலகத்தின் முக்கியத்துவம் என்பவற்றினை மாணவர்களுக்கிடையில் எடுத்துக்காட்டும் முகமாக கமு /திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை நூலகத்தினால் நூலக வாசங்களை அச்சிட்டு திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உற்பட்ட கமு/திகோ/ பாசுபதேஸ்வரா வித்தியாலம் மற்றும் கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய பாடசாலைகளுக்கு அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை நூலகத்தினால் வாசகங்களை அச்சிட்டு அன்பளிப்பாக வழங்கி வைத்தனர்.

திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை நூலகங்களுக்குடையில் நற்புறவினை ஏற்படுத்தும் முகமாக பாடசாலைகளின் நூலகத்திற்கு அக்ரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை நூலகத்தினால் நூலக வாசகங்களை வழங்கி வைத்தனர். மேலும் இன் நிகழ்வில் இரு பாடசாலைகளின் நூலக பொறுப்பாசிரியர்களான திரு. V. ராசதுறை, திரு. S. லோகநாதன் மேலும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்
இன் நிகழ்வுகளுக்கு கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் J.R. டேவிட் அமிர்தலிங்கம் அவர்களின் வழிகாட்டலிங்கீழ்,நூலக பொறுப்பாளர்களான , திரு.சி.சிறிக்காந்தன், S.A.C.M.றமின், திருமதி.கோ.கிரியாழினி ஆகியோரின் ஏற்பாட்டில்
நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.