பைக் வாங்க ஷோ ரூம் போன இளைஞர்.. காச எடுங்கன்னு சொன்னதும்.. “மனுஷன் சில்லறைய செதற விட்டாப்ல”.. இதான் காரணமா?

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களுக்கு விருப்பமான பைக் அல்லது கார் உள்ளிட்ட வாகனங்களை சிறுக சிறுக தாங்கள் சேமிக்கும் பணத்தை வாங்க வேண்டும் என விரும்புவார்கள்.

Rudhrapur man pays 50000 rupees in 10 rupee coins to buy scooty

அப்படி நாம் சேமிக்கும் பணத்தை கொண்டு நீண்ட நாளாக வாங்க வேண்டும் என நினைத்த பொருளை நாம் வாங்கி விட்டால் அதை விட பெரிய ஒரு ஆனந்தம் நிச்சயம் எதுவும் இருக்காது.

அந்த வகையில், இளைஞர் ஒருவர் தனக்கு விருப்பமான பைக் ஒன்றை வாங்க விரும்பிய நிலையில், அதற்கான பணத்தை அவர் கொடுத்த விதம் தான், தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் வீடியோவாக மாறி உள்ளது .

உத்தரகாண்ட்  மாநிலம், ருத்ராபூர் என்னும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் TVS Jupiter பைக் ஒன்றை வாங்க விரும்பி உள்ளதாக தெரிகிறது. இதற்காக சுமார் 50,000 ரூபாயை சேமித்த இளைஞர், அனைத்தையும் 10 ரூபாய் நாணயங்களாக சேர்த்து வைத்துள்ளார். தொடர்ந்து, இந்த பணத்தையும் பைக் ஷோ ரூம் கொண்டு சென்ற அந்த இளைஞர் தனக்கு பிடித்தமான பைக்கை வாங்கி உள்ளார்.

Rudhrapur man pays 50000 rupees in 10 rupee coins to buy scooty

இது தொடர்பாக இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் ஷோ ரூம் ஊழியர்கள் அந்த இளைஞர் கொண்டு வந்த 10 ரூபாய் நாணயங்களை எண்ணும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் பைக் வாங்க வந்த இளைஞர் மிகவும் பொறுமையாக இருந்து ஊழியர்கள் நாணயங்களை எண்ணுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அதே வேளையில், சுமார் 85,000 ரூபாய் விலை மதிப்புள்ள பைக்கிற்கான மீதி பணத்தை அவர் எப்படி செலுத்தினார் என்பது பற்றிய விவரம் சரிவர தெரியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Rudhrapur man pays 50000 rupees in 10 rupee coins to buy scooty

இதற்கு முன்பு கூட தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், பத்து ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 10 ரூபாய் நாணயங்களை சுமார் 3 ஆண்டுகளாக சேர்த்து பைக் வாங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.