மின் கட்டண அதிகரிப்பால் தேயிலை உற்பத்தி தொழிலுக்கு கடும் பாதிப்பு

அண்மையில் மின்கட்டணத் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், இரு மடங்குக்கு மேல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் தேயிலைத் தொழிற்சாலைகளைப் பராமரிப்பதில் கடும் சிக்கல் எழுந்துள்ளது.


இதனால் நாடு முழுவதும் பல தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுமார் 50,000 கொழுந்துகளை பயன்படுத்தும் தொழிற்சாலை ஒன்றின் சராசரி மின்சாரக் கட்டணம் 5 இலட்சம் ரூபாவாக இருந்த போதிலும் புதிய கட்டணத் திருத்தத்தின் கீழ் இந்தக் கட்டணம் 10 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் சுட்டிக்காட்டுகிறார்.

மின்வெட்டுக் காலத்தில் மின்சார உற்பத்திக்காக அதிகளவில் டீசல் பயன்படுத்தப்படுவதால் தேயிலை உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வங்கி வட்டி அதிகரிப்பால் தொழில்துறையும் மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.