இலங்கையில் சட்டவிரோத மதுபான தொழில்துறை 300% வளர்ச்சியடைந்துள்ளது – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இலங்கையின் சட்டவிரோத மதுபான கைத்தொழில் சமீப காலங்களில் 300 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த சட்டவிரோத மதுபானங்கள் அனைத்தும் தொலைதூர புதர் காடுகளில் உற்பத்தி செய்யப்படவில்லை. இவை அனைத்தும் உரிமம் பெற்ற மதுபான ஆலைகளுக்குள்ளேயே தயாரிக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

“புதர் காடுகளில் கசிப்பு காய்ச்சுவதில் ஈடுபட்டுள்ள பாரம்பரிய கிராம மக்களைப் போலல்லாமல், தற்போது மதுபானம் தயாரிக்க கலால் உரிமத்துடன் கழுத்துப்பட்டி அணிந்த தொழில்முனைவோர் சட்டவிரோத மதுபானங்களை உற்பத்தி செய்கிறார்கள்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை கலால் உத்தியோகத்தர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் அண்மையில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடு தொடர்பான உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையில் சட்டவிரோத மதுபான கைத்தொழில் 300 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உண்மையாக அரசுக்கு வரி செலுத்தாமல் இருப்பது, சட்டவிரோத மதுபான உற்பத்தித் தொழிலில் ஈடுபடுவதாகவும் வரையறுக்கலாம். WHO அறிக்கையின்படி 2004 முதல் 2016 வரை இலங்கையின் சட்டவிரோத மதுபான தொழில்துறை 95 வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதுடன் நாட்டின் உண்மையான மதுபான தொழில்துறையானது 50% மாத்திரமே வளர்ச்சியடைந்துள்ளது” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“1810 ஆம் ஆண்டு நாட்டிற்கு கலால் வரி முறையைக் கண்டுபிடித்த பிரித்தானியர்கள் கூட, இலங்கையின் மீது முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதற்கு முன்பே, அதன் அரச வருவாயில் 7.6% கலால் வரி மூலம் சம்பாதிக்க முடிந்தது. எனவே, இந்த வரிவிதிப்பு முறைகளை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.