டிறிபேக் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வுகூட கணினி அறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.
த.சுபேசன்
சாவகச்சேரி
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் அமையப்பெறவுள்ள விஞ்ஞான ஆய்வுகூட கணினி அறைக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 29/10 சனிக்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் அதிபர் எஸ்.பேரின்பநாயகம் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இரண்டு மாடிகளைக் கொண்ட குறித்த கட்டடமானது அண்மையில் கனடா நாட்டில் அமரத்துவமடைந்த டிறிபேக் கல்லூரியின் பழைய மாணவன் க.விநாயகலிங்கம் அவர்களது ஞாபகார்த்தமாக அவரது புதல்வன் கந்தாகரனின் நிதிப் பங்களிப்பில் அமையப் பெறவுள்ளது.
அடிக்கல் நாட்டு வைபவத்தில் பிரதம விருந்தினராக அமரர் விநாயகலிங்கத்தின் சகோதரர் க.தர்மலிங்கம் தம்பதியினர் கலந்து சிறப்பித்திருந்தனர்.மேலும் நிகழ்வில் திருமதி.சுப்பிரமணியம்,நிதிப் பங்களிப்பாளர் கந்தாகரன், நிபுணத்துவ ஆலோசகர் பொறியியலாளர் சுந்தரகுமார், திட்ட இணைப்பாளர் றோஹான் தேவராசா, தொழில்நுட்ப உத்தியோகத்தர்,பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள்,ஆசிரியர்கள்,மா ணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை