கௌரவமான அரசியல் தீர்வு கோரி அளவெட்டியில் போராட்டம்.
சாவகச்சேரி
இலங்கையின் வடக்கு-கிழக்கு வாழ் மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வினைக் கோரி யாழ்ப்பாணம்-அளவெட்டிப் பகுதியில் 02/11 புதன்கிழமை வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த அமைப்பினால் அரசியல் தீர்வு கோரி 100நாள் செயல் முனைவுப் போராட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் 94வது நாள் போராட்டம் அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்றது.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெண்கள்,இளையோர் அமைப்புக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.













கருத்துக்களேதுமில்லை