யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த அவலம்..! 21 வயது இளைஞன் துடிதுடித்து பலி!!

யாழ்ப்பாணம் – புங்கங்குளம் புகையிரதக் கடவையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியதில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் புங்கங்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் 2.15 (pm) மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனை அதே புகையிரதத்தில் ஏற்றி மீளத் திரும்பி யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து நோயாளர் காவு வண்டியில் ஏற்றி யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த அவலம்..! 21 வயது இளைஞன் துடிதுடித்து பலி | Train Accident Jaffna Death Boy

 

உயர்ந்த இளைஞன் பாண்டியன் தாழ்வு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வெற்றிவேல் டினோயன் என தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.