அல்லாரை மாதா பேராலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

கொடிகாமம் அல்லாரை புனித செபமாலை மாதா பேராலயத்திற்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. மரியன்னை தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா இடம்பெற்ற போதே புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. ஆலய பங்குத்தந்தை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் கலாநிதி பி.ஜே.ஜெபரட்ணம் அடிகளார் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
98 ஆண்டுகள் பழமையான செபமாலை அன்னை ஆலயம் நூற்றாண்டை முன்னிட்டு புதிய பேராலயமாக நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தின் வருடாந்த திருவிழாவான வெள்ளிக்கிழமை காலை திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு செபமாலை அன்னையின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.