1993ஆம் ஆண்டு வான்படை தாக்குதலில் பலியான சங்கத்தானை மக்களுக்கு தீப அஞ்சலி.
இலங்கை வான்படையினரின் புக்காரா தாக்குதலில் பலியான 20 பொதுமக்களினது 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அண்மையில் சாவகச்சேரி-சங்கத்தானைப் படுகொலை நினைவு முற்றத்தில் இடம்பெற்றது.
கடந்த 1993/09/28 அன்று இலங்கை இராணுவம் சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் மேற்கொண்ட மிலேச்சத்தனமான வான்வழித் தாக்குதலில் 13சிறுவர்கள் உட்பட 20பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அவ்வாறு கொல்லப்பட்ட உறவுகளின் 29ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு சங்கத்தானை சாரதா சன சனசமூக நிலையத்தில் தீப ஊர்வலத்துடன் ஆரம்பமாகி படுகொலை இடம்பெற்ற உதயன் மரக்காலை நினைவு முற்றத்தில் நிறைவு பெற்றது.குறித்த அஞ்சலி நிகழ்வில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
புக்காரா தாக்குதலில் இருந்து தப்பிக்க பதுங்கு குழிக்குள் அடைக்கலம் புகுந்த வேளையில் பதுங்குகுழி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20அப்பாவி உயிர்கள் காவு கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை