இன்று திங்கட்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை

இன்று (07) திங்கட்கிழமை மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, 1 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்குறித்த பகுதிகளில் மாலை 5.30 முதல் இரவு 8.30 வரையாக காலப்பகுதிக்குள் சுழற்சி முறையில் 1 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.