ஐ.நா மாநாட்டுடன் ஆதாயங்களை தேட சிறிலங்கா முயற்சி
எகிப்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது தேசிய சுற்றாடல் கொள்கைக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கு அதிபர் விளக்கமளித்துள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐ.நா செயலாளருடன் ரணில் சந்திப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை எகிப்திற்கு பயணமாகியுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான ‘கோப் 27’ மாநாடு எகிப்தின் ஷாம் – எல் ஷேக் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், நாளையும், நாளை மறுதினமும் அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதுடன், இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றம் தொடர்பிலும் உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, அங்கு நடைபெறவுள்ள உலக உணவு பாதுகாப்பு பேரவை மற்றும் உலக தலைவர்களின் பேரவையிலும் அவர் பங்குபற்றவுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை