பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக புதிய மாணவர்களை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு

பேராதனை பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று சமூக வலைத்தளங்கள் ஊடாக புதிய மாணவர்களை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸாரும் பல்கலைக்கழக ஒழுக்காற்று திணைக்களமும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


புதிய மாணவர் ஒருவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதம ஒழுக்காற்று அதிகாரியிடம் செய்த முறைப்பாட்டையடுத்து,அவர் சம்பவம் தொடர்பில் நேற்று (05) பொலிஸில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதிய மாணவர்களின் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு வட்ஸ்அப் குழுவை உருவாக்கி, ஆபாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் ஆபாச இணையத்தளங்களின் முகவரிகளை அனுப்புவதன் மூலம், புதிய மாணவர்கள் அவற்றைப் பார்க்கவும் பதிலளிக்கவும் வற்புறுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.