அரசாங்கத்தின் செலவீனம் அதிகரிப்பு தொடர்பில் ஹர்ஷ டி சில்வா

 

2023 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் செலவீனம் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்தார்.
இதற்கமைய கடந்த 2022 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் செலவீனம் 6.2 ட்றில்லியனாக அமைந்திருந்த நிலையில், 2023 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவீனம், 7.9 ட்றியியனாக அதிகரித்துள்ளது.

அதாவது, அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 1657 பில்லியனாக அதிகரித்துள்ளது.அரசாங்கத்தின் செலவீனம் அதிகரிப்பு அரசாங்கத்தின் செலவீனம் அதிகரித்துள்ளமைக்கு நிகராக வருமானத்தினை ஈட்டிக்கொள்வதற்கு அரசாங்கம் எவ்வாறான திட்டங்களை முன்வைத்துள்ளது என்பதனையும் அறியத்தரவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.