பங்கையற்செல்வனின் “உயிர்மை” ஓவியக் கண்காட்சியும்-நூல் அறிமுக நிகழ்வும்.
சாவகச்சேரி நிருபர்
அதிபர் அ.பங்கையற்செல்வனின் “உயிர்மை” ஒளி ஓவியக் கண்காட்சியும், “நிழல்கள் சொல்லும் கதைகள்” நூல் அறிமுக நிகழ்வும் அண்மையில் சாவகச்சேரியில் அமைந்துள்ள ரி.பி ஹன்ற் ஞாபகார்த்த ஓவியக்கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
ஹன்ற் ஞாபகார்த்த ஓவியக் கூடத்தின் ஸ்தாபகர் திருமதி யோகமணி அழகரத்தினம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விருந்தினர்களாக தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி,தென்மராட்சிக் கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் செல்வி அபிராமி,கோப்பாய் கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் து.இளங்கோ,அழகியல் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி விஜிதா சுனில் ஆரியரத்ன,சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் பொ.நடேசலிங்கம், யா/போக்கட்டி அ.த.க பாடசாலை அதிபர் தி.அபராஜிதன் மற்றும் எழுத்தாளர் கருணாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.நிகழ்வில் நிழல்கள் சொல்லும் கதைகள் நூல் அறிமுக உரையை காவேரி கலாமன்ற நிறைவேற்று இயக்குநர் கலாநிதி வண ரி.எஸ் ஜோசுவா ஆற்றி நூலை அறிமுகம் செய்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை