சந்திரபுரம் அம்பாள் சனசமூக நிலையத்தின் 38வது ஆண்டு நிறைவு விழா

தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மட்டுவில்-சந்திரபுரம் அம்பாள் சனசமூக நிலையத்தின் 38வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள் அண்மையில் நிலைய முன்றலில் இடம்பெற்றிருந்தன.
நிலையத்தின் தலைவர் நா.திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளரும்-கரவெட்டி பிரதேசசபை உறுப்பினருமான ச.இராமநாதன் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் நிகழ்வில் இனிய விருந்தினர்களாக சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி டார்வின்,சந்திரபுரம் கிராம சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் க.தயாளன் மற்றும் சாவகச்சேரி நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி.தளிர்ராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
ஆண்டு விழா நிகழ்வில் சிறப்பு நிகழ்வுகளாக அம்பாள் முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்வுகள்,சந்திரபுரம் கிராமத்தின் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு ஆகியன இடம்பெற்றிருந்தன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்