யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் சோதனை – இராணுவம் வெளியிட்ட அறிவித்தல்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினரால் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதைப் பொருட்கள் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.

சோதனைச் சாவடி

யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் சோதனை - இராணுவம் வெளியிட்ட அறிவித்தல் | Army Checkpoints At Jaffna Control Drugs

 

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய நேற்று முதல் யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களில் இராணுவத்தினரால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு போதைப் பொருள் விநியோகம் மற்றும் போதைப் பொருள் பாவிப்போர் கைதுசெய்யப்படவுள்ளதாக யாழ். இராணுவ கட்டளை தளபதி தெரிவித்துள்ளார்.

எனவே பொதுமக்கள் இந்த விடயத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி, எதிர்கால சந்ததியினர் போதைக்கு அடிமையாவதை தடுக்க உதவுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்