யாழ்ப்பாணம்- நுணாவில் பகுதியில் விபத்து!!
யாழ்ப்பாணம்- நுணாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகலில் இடம்பெற்றுள்ளது.
ஏ9 வீதி ஊடாக பயணித்த பேருந்துடன் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் வெற்றிலைக் கேணிப் பகுதியைச் சேர்ந்த 22மற்றும் 19 வயதான இரு இளைஞர்களே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை