இலங்கை தொடர்பில் ஐ.நா வெளியிட்ட அபாய அறிவிப்பு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி அதனாலேற்பட்டுள்ள உணவுப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இலங்கையில் மோசமான உணவு நெருக்கடி அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அபாய அறிவிப்பை விடுத்துள்ளது.
இவ்வாறு மோசமான உணவு நெருக்கடி அதிகரிப்பினால் அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கையும் இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை இன்று (08) தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள 22 மில்லியன் சனத்தொகையில் 1.7 மில்லியன் மக்களுக்கு உதவி தேவைப்படுவதாக ஜூன் மாதம் ஐ.நா முகவரகங்கள் மதிப்பிட்டிருந்த போதும் தற்போது அந்த எண்ணிக்கை 3.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா முகவரகங்கள், இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்க 79 மில்லியன் டொலர்களை திரட்டியதாகவும், ஆனால் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு கூடுதலாக 70 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை