தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான சம்பவத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட்டை அரசியலாக்குவதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கும் கீர்திக்கும் மேலும் சேதம் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு விளையாட்டு நிர்வாகத்தில் தலையிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவை இட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்