வடமாகாண இறைவரி ஆணையாளர் மாகாணசபையின் நியதிச் சட்டங்களை மீறிச் செயற்படுகிறார்-நகரசபை உறுப்பினர் கஜிதன் குற்றச்சாட்டு.

சாவகச்சேரி நிருபர்
வடக்கு மாகாண இறைவரி ஆணையாளர் மாகாணசபையின் நியதிச் சட்டங்களை மீறிச் செயற்பட்டு வருவதாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் க.கஜிதன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில் சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற விசேட அமர்வில் தான் இவ் விடயத்தை சுட்டிக்காட்டியிருந்ததாகத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
2014ஆம் ஆண்டு 2ஆம் இலக்க வடக்கு மாகாண முத்திரைத் தீர்வை கைமாற்றல் நியதிச் சட்டத்தின் 2(1) ம் பிரிவின் படி சாவகச்சேரி நகரசபைக்கு கிடைக்க வேண்டிய மேலதிக முத்திரைத் தீர்வை நிதியினை வழங்க வடக்கு மாகாண இறைவரித் திணைக்கள ஆணையாளர் அனுமதி மறுத்துள்ளார்.
இதனூடாக இறைவரி ஆணையாளர் நகரசபையின் வருமான வழியினை தடுத்து எமது அபிவிருத்திக்கு தடையாக உள்ளார்.
கடந்த காலங்களில் குறித்த நிதி உரிய காலங்களில் விடுவிக்கப்பட்டு வந்த போதிலும் தற்போதைய இறைவரி ஆணையாளர் நிதியை விடுவிக்க மறுக்கின்றார்.
இதனூடாக இவர் மாகாண நியதிச் சட்டங்களை மீறிச் செயற்படுகிறார்.இது எமது சபைக்கு மாத்திரமன்றி ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பெருமளவான நிதி விடுவிக்கப்படவில்லை.இது தொடர்பாக நகர,பிரதேச சபைகளின் தவிசாளர்கள்,செயலாளர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கத் தவறிய உள்ளனர்.
எனவே இவ் விடயம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர்,வட மாகாண பிரதம செயலாளர்,உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து கிடைக்க வேண்டிய நிதியினை விடுவிக்க வேண்டும்.என மேலும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.