கடன் திட்டத்தில் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் -கிழக்கு மாகாண ஆளுநர்

 

 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என தூதுவர் கலந்துரையாடலின் போது வலியுறுத்தியதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

“ஒரு வெற்றிகரமான கடன் மறுசீரமைப்பு திட்டம் மற்றும் IMF திட்டத்தைப் பாதுகாக்க அமெரிக்கா உதவி மற்றும் வசதிகளை வழங்கும் என தூதுவர் தெரிவித்தார்.

நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும்,அந்த முடிவுகள் நாட்டில் இலவச கல்வி மற்றும் சுகாதார சேவையை , பாதுகாக்க வேண்டும் என நான் தூதரிடம் தெரிவித்தேன் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.