அரச அதிபர் தலைமையில் மாவட்ட அனத்தம் முன்னெச்சரிக்கை தொடர்பான கலந்துரையாடல்.!
யாழில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை தொடர்பான அனர்த்த முகாமைத்துவ முன்னெச்சரிக்கை தொடர்பில் மாவட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் யார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதிகள் தொடர்பில் வீடியோ காணொளிகள் மூலம் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா விளக்கம் அளித்தார்.
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நாவலடி , சண்டிலிப்பாய் பிரதேச செயலாளருக்கு உற்பட்ட காக்க தீவு, வேலணைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 25 வீட்டுத் திட்ட குடியிருப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
கோபாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தொண்டமானாறு தடுப்பணையை திறந்து நீரை வெளியேற்றுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த விடையங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறித்த விடையங்கள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டிய நிலையில் அவசியமான திட்டங்களை பிரதேச செயலாளர் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சபையுடன் இணைந்து சரி செய்யக்கூடிய ஒரு பொறிமுறையை ஏற்படுத்துமாறு தெரிவித்தார்
கருத்துக்களேதுமில்லை