யாழில் 14 முதல் 21 ஆம் திகதி வரை நீரிழிவு விழிப்புணர்வு வாரம்

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நீரிழிவு விழிப்புணர்வு வாரமாக அனுஷ்டிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


இங்கு நீரிழிவு நோய் குறித்த கருத்துரைகளும் நீரிழிவு நோயாளர்களுக்கான உணவு முறைகளும் அவற்றின் அளவும் மூலிகைகளின் பயன்பாடும் காட்சிப்படுத்தப்படுவதுடன் நீரிழிவு நோயாளர்களுக்கான யோகாசன மூச்சுப்பயிற்சி வழிகாட்டல்களும் இரத்தப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுமென சித்த போதனா வைத்தியசாலை மருத்துவப் பொறுப்பதிகாரி ஜெபநாம கணேசன் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.