கனடாவில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு ஒர் நற்செய்தி

கனடாவில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஓர் நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஒன்றான GO நிறுவனத்தின் பஸ் போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த நான்கு நாட்களாக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போக்குவரத்து சேவை தொழிற்சங்கம் மெட்ரோலிங்க்ஸ் நிறுவனத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு ஒர் நற்செய்தி | Go Transit Workers Reach Tentative Agreement

இந்த வார இறுதியில் மீளவும் பஸ் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே போக்குவரத்து சேவையைச் சேர்ந்த 2200 பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.