போதைப்பொருளுக்கு எதிரான அணியினரால் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு.

சாவகச்சேரி நிருபர்
போதைப்பொருள் பாவனைக்கு எதிரான இளைஞர் அணியினரால் 09/11 புதன்கிழமை யாழ் இந்து மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போதைப்பொருள் பாவனைக்கு எதிரான இளைஞர் அமைப்பின் பிரதான ஒருங்கிணைப்பாளரும்- இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான வசந் தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தமர்வு நிகழ்வில்;
“தடுமாறும் பருவமும் தடம் மாறாத கல்வியும்” எனும் கருப்பொருளில் உளவியல் ஆலோசகர் எஸ்.ஜே.ஆதியும்,
“போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் சட்டத்தின் வகிபாகம்” எனும் தொனிப்பொருளில் சட்டத்தரணி சிவஸ்கந்தசிறியும்,
“கல்விக்கான ஊக்குவிப்பும்-வளப்படுத்தலும்” எனும் கருப் பொருளில் அருட்கலாநிதி டேவிட் வின்சன் பற்றிக் அவர்களும்,
“போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கான முற்காப்பு நடவடிக்கைகள்” எனும் கருப்பொருளில் பிரதிபலிப்பு சிகிட்சையாளர் ப.நிர்மலனும் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தியிருந்தனர்.
மாற்றம் அறக்கட்டளை,யாழ் நியூ வேள்ட் லயன்ஸ் கழகம்,கே.கே.பி இளைஞர் கழகம்,யடாயுதா தன்னார்வ அமைப்பு,சிவனருள்,டபிள்யூ.சி.டபிள்யூ.ஓ அமைப்பு,அனைத்துலக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.