வரவு செலவுதிட்டத்திற்கான ஆதரவு பேச்சுவார்த்தை..! நாடு திரும்பும் பசிலின் அடுத்தகட்ட நகர்வு

அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக பசில் ராஜபக்ச நாடு திரும்பவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலில் ஏற்பட்ட நெருக்கடிகளை தொடர்ந்து பதவி விலகி செப்டம்பரில் அமெரிக்கா சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்பவுள்ளார் என அரசியல் வடடாரங்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வரவு செலவுதிட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உடனடி நடவடிக்கை

வரவு செலவுதிட்டத்திற்கான ஆதரவு பேச்சுவார்த்தை..! நாடு திரும்பும் பசிலின் அடுத்தகட்ட நகர்வு | Basil Rajapaksha America Return Budget Srilanka

அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ள பசில் ராஜபக்ச சிறிலங்கா பொதுஜனபெரமுனவை மீள கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வரவு செலவுதிட்டத்திற்கான ஆதரவை பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதே அவரது உடனடி நடவடிக்கையாக காணப்படும் என கூறப்படுகின்றது.

மேலும், அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டால் அடுத்த வருடம் பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை நெருக்கடி இன்றி செயற்படலாம் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.