காவல்துறை அதிகாரிகளை கட்டி அணைத்தது ஏன்- ஹிருணிக்கா விளக்கம்

காவல்துறை அதிகாரிகளைக் கட்டிப்பிடித்ததாக தான் குற்றம் சாட்டப்பட்டதாகவும் ஆனால் தான் கட்டிப்பிடித்த போது, தன்னை அவர்கள் ஒதுங்கச் சொல்லவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு ஹிருணிக்கா குறிப்பிட்டார். தமக்கு இருக்கும் அதே பிரச்சினை அவர்களுக்கும் உள்ளதாகவும் குண்டாந்தடிகள் மற்றும் ஏனைய ஆயுதங்களுடன் வரும் காவல்துறையினரை அமைதியான முறையில் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

காவல்துறை அதிகாரிகளை கட்டிபிடிப்பது

காவல்துறை அதிகாரிகளை கட்டி அணைத்தது ஏன்- ஹிருணிக்கா விளக்கம் | Hirunika Explains Why She Hugs Police Officers

போராட்டத்தின் போது காவல்துறை அதிகாரிகளை ஹிருணிகா பிரேமச்சந்திர கட்டிப்பிடிப்பது அவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் தந்திரோபாயமாக இருந்ததாக கறுவாத்தோட்ட காவல்துறையினருடன் ஆஜரான உதவி காவல்துறை அத்தியட்சகர் நெவில் டி சில்வா நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

கொழும்பு 7 இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஹிருணிக்கா உள்ளிட்ட 15 பேர் கடந்த திங்கட்கிழமை (14) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

பல சந்தர்ப்பங்களில்

காவல்துறை அதிகாரிகளை கட்டி அணைத்தது ஏன்- ஹிருணிக்கா விளக்கம் | Hirunika Explains Why She Hugs Police Officers

 

பல சந்தர்ப்பங்களில், கடமையில் இருந்த காவல்துறை அதிகாரிகளை கட்டிப்பிடிப்பதை ஹிருணிகா பிரேமச்சந்திர வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் இது அவரது செயற்பாட்டு முறை (குற்றவியல் நடத்தை முறை) என காவல்துறையினர் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.