எட்டு மில்லியன் ரூபாய் செலவில் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலை அங்குரார்பணம் !

யாழ் சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலையின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தொகுதி திறப்புவிழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று காலை பாடசாலையின் அதிபர் ப.சிவலோகநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் பொழுது பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட திருமதி.அகிலா ராஜராஜன்(ACMA)(Grand daughter of sinnamma & Chairperson of KNP Trust London) மற்றும் பேராசிரியர் திரு. ராஜராஜன்(OBE London) அவர்களால் புதிதாக புனரமைப்பு பெற்ற வித்தியாசாலை வளாகம் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டதோடு, நிறுவுனர் சிலையும் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வித்தியாசாலையின் நிறுவுனரின் முப்பாட்டன் ஜஷிகன் இராஜலதனால்(Son of Re/Max North Realty Owner) திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மாணவர்களின் நலன் கருதி KNP Trust மூலம் உருவாக்கப்பெற்ற திறன் வகுப்பறையும் (smart calss room) பேராசிரியர் ராஜராஜன்(OBE London) இனால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர் கலைநிகழ்வுகளும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது
சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலையின் அதிபர் ப.சிவலோகந்தன், பேராசிரியர் ராஜராஜன், திருமதி. அகிலா ராஜராஜன், வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளர் பொ. ரவிச்சந்திரன், வித்தியாசாலை நிறுவுனரின் முப்பாட்டன் ஜஷிகன் இராஜலதன், நடேசன், சக்கரத்தை உபதபாலதிபர், பழைய மாணவர் சங்க செயலாளர் செந்தில்குமார், விரிவுரையாளர் ஆஷா, பழைய மாணவர்கள், சமூக மட்ட அமைப்பினர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த வித்தியாசாலையின் புனரமைப்பு வேலைகள் அனைத்தும் Santhakumar Kerthanan மேற்பார்வையில் Noble Reign Development (Pvt) Ltd. நிறுவனத்தினால் குறிப்பிட்ட காலத்திற்குள் மிக கச்சிதமாக நிறைவுசெய்ததுடன் இதற்குரிய மொத்த செலவாகிய எட்டு மில்லியன் ரூபாய் நிதிப் பங்களிப்பை பேராசிரியர் ராஜராஜன் மற்றும் திருமதி அகிலா ராஜராஜன்(Grand Daughter of Sinnamma) KNP Trust ltd (UK) மூலமாக
வளங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்